Sugapriya Hospital, Madurai

90929-99686 0452-4991516

24 மணி நேரமும்

பொது அறுவை சிகிச்சைGeneral Surgery

மூல நோய் (பைல்ஸ்) சிகிச்சைPiles Treatment and Surgery in Madurai

மூல நோய்க்கு எல்லோருக்கும் அறுவை சிகிச்சை தேவைப்படுவதில்லை. பரிசோதித்த பிறகு, ஏற்ற சிகிச்சை முடிவு செய்யப்படும்.

மூல நோய் (பைல்ஸ்) என்றால் என்ன?

ஆசனவாய்ப் பகுதியில் உள்ள ரத்தக்குழாய்கள் வீங்குவதே மூல நோய். ஆங்கிலத்தில் piles அல்லது haemorrhoids. உள்ளே இருப்பது உள் மூலம்; வெளியே தெரிவது வெளி மூலம்.

மூல நோய் அறிகுறி

மலம் கழிக்கும்போது ரத்தம் வருதல், ஆசனவாயில் அரிப்பு, சிறு கட்டி போன்ற புடைப்பு, உட்காரும்போது அசௌகரியம்.

மலத்தில் ரத்தம் தொடர்ந்து வந்தால், மூலம் என்று நீங்களே முடிவு செய்யாமல் டாக்டரிடம் காட்டுங்கள்.

மூல நோய் வர காரணம்

நீண்ட நாள் மலச்சிக்கல், மலம் கழிக்கும்போது அதிகம் முக்குதல், நார்ச்சத்து குறைந்த உணவு, நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல், கர்ப்ப காலம்.

மூல நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள், பழங்கள், முழு தானியங்கள். நாள் முழுவதும் போதிய தண்ணீர். காரமும் எண்ணெயும் அதிகமான உணவைக் குறைப்பது நல்லது.

அறுவை சிகிச்சை இல்லாமல் சரியாகுமா?

தொடக்க நிலையில், உணவு மாற்றமும் மருந்துகளும் பெரும்பாலும் போதும். அவை போதாதபோது அல்லது மூலம் முற்றிய நிலையில், அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

மூல நோய்க்கு நிரந்தர தீர்வு உண்டா?

அறுவை சிகிச்சை, வீங்கிய மூலத்தை நீக்குகிறது. மீண்டும் வராமல் இருக்க, நார்ச்சத்து உணவு, தண்ணீர், மலச்சிக்கல் இல்லாத பழக்கம் ஆகியவை தொடர வேண்டும்.

பைல்ஸ் ஆபரேஷனுக்குப் பின்

மலம் இளகலாக இருக்க நார்ச்சத்து உணவு, தண்ணீர், டாக்டர் எழுதித் தரும் மருந்துகள். வெதுவெதுப்பான நீரில் உட்காருவது (sitz bath) இதம் தரும்.

மூல நோய், வெடிப்பு (fissure), பவுத்திரம் (fistula): என்ன வேறுபாடு?

மூன்றும் வெவ்வேறு. மூல நோய், ரத்தக்குழாய் வீக்கம். ஆசனவாய் வெடிப்பு, ஆசனவாயின் உட்புறத் தோலில் ஏற்படும் சிறு கீறல். பவுத்திரம், ஆசனவாய் அருகே உருவாகும் சிறு பாதை. பரிசோதித்த பிறகே எது என்று உறுதியாகத் தெரியும்.

எந்த டாக்டரைப் பார்க்க வேண்டும்?

பொது அறுவை சிகிச்சை நிபுணர் (General Surgeon). சுகபிரியாவில், நீண்ட அனுபவம் கொண்ட மூத்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் இருக்கிறார்கள். மூல நோய் மிகவும் பொதுவானது; டாக்டர்கள் அன்றாடம் பார்ப்பது. தயக்கமின்றிப் பேசலாம்.

இந்தப் பக்கம் பொதுவான தகவலுக்காக. உங்கள் உடல்நிலைக்கான ஆலோசனையை டாக்டரிடம் நேரில் பெறுங்கள்.

“உயர்ந்த நலம், நிரந்தர ஆரோக்கியம்” — The outpatient entrance of Sugapriya Hospital

வாங்க, பார்த்துக்கலாம்.

சுகபிரியா மருத்துவமனைLake View Road (80 அடி ரோடு), KK நகர், மதுரை – 625020
சுந்தரம் பார்க் அருகில்

தூங்கா நகரம் மதுரை. நாங்களும் 24 மணி நேரமும் இருக்கிறோம்.

சுகபிரியா பற்றி, இங்கு வந்த குடும்பங்கள் Google-ல் எழுதியதைப் படியுங்கள்.

Google கருத்துகளைப் படிக்கRead our Google reviews

மூத்த நிபுணர்கள்.
நீண்ட அனுபவம்.Senior surgeons with extensive experience

  • நிபுணர்General Surgeon
  • புதிய Operation TheatreC-Arm
  • ICUVentilator
  • Lab, Digital X-rayEcho, TMT
  • 24 மணி நேரமும்Open 24 hours

வரும்போது, முந்தைய reports, scan, மருந்துச் சீட்டுகளைக் கொண்டு வாருங்கள்.

புதிய Operation Theatre, C-Arm — The new operation theatre with C-arm at Sugapriya Hospital
புதிய Operation Theatre. உங்களுக்கும், உடன் வரும் குடும்பத்துக்கும் அதே அக்கறை.

Piles Treatment in Madurai

Piles (haemorrhoids, also spelled hemorrhoids) are swollen blood vessels in and around the anus. Common signs are bleeding while passing stools, itching, a small lump and discomfort while sitting.

Not everyone with piles needs an operation. In the early stages, more fibre, more water and medicines are usually enough. Piles surgery is advised when these do not help or when the piles are advanced.

At Sugapriya Hospital, KK Nagar, Madurai, piles are treated by senior surgeons with extensive experience, and piles operations are done in a new operation theatre. The hospital is open 24 hours.

Which doctor should I visit for piles?

A general surgeon. Piles are very common and doctors see them every day, so there is no need to hesitate. Call 90929-99686 or 0452-4991516 for consultation hours.

Can piles be treated without surgery?

Often, yes. Early piles are usually managed with diet changes and medicines. Surgery is for piles that do not respond or are advanced.

Is bleeding always due to piles?

No. A fissure and other conditions can also cause it. Bleeding that continues should be checked by a doctor, not assumed to be piles.

This page gives general information. Please see a doctor for advice about your own health.