Sugapriya Hospital, Madurai

90929-99686 0452-4991516

24 மணி நேரமும்

பொது அறுவை சிகிச்சைGeneral Surgery

குடலிறக்கம் (ஹெர்னியா) அறுவை சிகிச்சைHernia Surgery in Madurai

வயிற்றுச் சுவரில் தளர்ந்த இடத்தைச் சரிசெய்து வலுப்படுத்தும் அறுவை சிகிச்சை.

குடலிறக்கம் (ஹெர்னியா) என்றால் என்ன?

வயிற்றுச் சுவரின் தசையில் ஓர் இடம் தளரும்போது, உள்ளே இருக்கும் குடல் அல்லது கொழுப்புத் திசு அந்த இடம் வழியாக வெளியே புடைக்கிறது. இதுவே குடலிறக்கம். ஆங்கிலத்தில் hernia.

ஹெர்னியா வகைகள்

  • தொடை இடுக்கில் வருவது (inguinal hernia). இதுவே மிகவும் பொதுவானது.
  • தொப்புளில் வருவது (umbilical hernia).
  • முன்பு அறுவை சிகிச்சை செய்த தழும்பில் வருவது (incisional hernia).

குடலிறக்கம் அறிகுறிகள்

தொடை இடுக்கில் அல்லது தொப்புளில் ஒரு புடைப்பு. நிற்கும்போதும், இருமும்போதும், எடை தூக்கும்போதும் அது பெரிதாகத் தெரியும்; படுத்தால் உள்ளே சென்றுவிடலாம். சிலருக்கு அந்த இடத்தில் இழுப்பது போன்ற உணர்வு இருக்கும்.

புடைப்பு கடினமாகி உள்ளே செல்லாமல் இருந்தால், காத்திருக்காமல் மருத்துவமனைக்கு வாருங்கள். சுகபிரியா 24 மணி நேரமும் திறந்திருக்கிறது.

குடலிறக்கம் ஏற்பட காரணம்

வயதாகும்போது தசை தளர்வது, நீண்ட நாள் இருமல், மலச்சிக்கல், அதிக எடை தூக்குதல், உடல் எடை கூடுதல், முன்பு செய்த அறுவை சிகிச்சை ஆகியவை காரணமாகலாம்.

அறுவை சிகிச்சை இல்லாமல் சரியாகுமா?

குடலிறக்கம் மருந்தால் மூடுவதில்லை; தானாகவும் மறைவதில்லை. அதைச் சரிசெய்ய அறுவை சிகிச்சையே வழி. ஹெர்னியா பெல்ட் புடைப்பைத் தற்காலிகமாகத் தாங்கும்; தளர்ந்த இடத்தை மூடாது.

ஹெர்னியா ஆபரேஷன் எப்படிச் செய்யப்படும்?

புடைத்த பகுதி உள்ளே வைக்கப்பட்டு, தளர்ந்த இடம் தைத்து வலுப்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் அதன் மேல் ஒரு மெல்லிய வலை (mesh) பொருத்தப்படுகிறது. உங்களுக்கு ஏற்ற முறையை அறுவை சிகிச்சை நிபுணர் விளக்குவார்.

ஹெர்னியா அறுவை சிகிச்சைக்குப் பின்

சீக்கிரமே மெதுவாக நடக்கத் தொடங்கலாம். சில வாரங்களுக்குக் கனமான பொருட்களைத் தூக்க வேண்டாம். மலச்சிக்கல் வராமல் இருக்க நார்ச்சத்து உணவும் தண்ணீரும் உதவும். எப்போது வேலைக்குத் திரும்பலாம் என்பதை டாக்டரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

எந்த டாக்டரைப் பார்க்க வேண்டும்?

பொது அறுவை சிகிச்சை நிபுணர் (General Surgeon). சுகபிரியாவில், நீண்ட அனுபவம் கொண்ட மூத்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் இருக்கிறார்கள். டாக்டரின் நேரம் தெரிந்துகொள்ள, எங்களை அழைக்கலாம்.

இந்தப் பக்கம் பொதுவான தகவலுக்காக. உங்கள் உடல்நிலைக்கான ஆலோசனையை டாக்டரிடம் நேரில் பெறுங்கள்.

“உயர்ந்த நலம், நிரந்தர ஆரோக்கியம்” — The outpatient entrance of Sugapriya Hospital

வாங்க, பார்த்துக்கலாம்.

சுகபிரியா மருத்துவமனைLake View Road (80 அடி ரோடு), KK நகர், மதுரை – 625020
சுந்தரம் பார்க் அருகில்

தூங்கா நகரம் மதுரை. நாங்களும் 24 மணி நேரமும் இருக்கிறோம்.

சுகபிரியா பற்றி, இங்கு வந்த குடும்பங்கள் Google-ல் எழுதியதைப் படியுங்கள்.

Google கருத்துகளைப் படிக்கRead our Google reviews

மூத்த நிபுணர்கள்.
நீண்ட அனுபவம்.Senior surgeons with extensive experience

  • நிபுணர்General Surgeon
  • புதிய Operation TheatreC-Arm
  • ICUVentilator
  • Lab, Digital X-rayEcho, TMT
  • 24 மணி நேரமும்Open 24 hours

வரும்போது, முந்தைய reports, scan, மருந்துச் சீட்டுகளைக் கொண்டு வாருங்கள்.

புதிய Operation Theatre, C-Arm — The new operation theatre with C-arm at Sugapriya Hospital
புதிய Operation Theatre. உங்களுக்கும், உடன் வரும் குடும்பத்துக்கும் அதே அக்கறை.

Hernia Surgery in Madurai

A hernia is a bulge that appears when part of the intestine or fatty tissue pushes through a weak spot in the abdominal wall. The common types are inguinal hernia (in the groin), umbilical hernia (at the navel) and incisional hernia (at the scar of an earlier operation).

A hernia does not close with medicine or go away on its own, so hernia treatment means surgery. In a hernia operation the bulge is placed back and the weak spot is repaired, usually with a mesh.

At Sugapriya Hospital, KK Nagar, Madurai, hernia operations are done by senior surgeons with extensive experience. The new operation theatre, a critical care ICU, lab and digital X-ray are in the same building. The hospital is open 24 hours.

Which doctor should I see for a hernia in Madurai?

A general surgeon. Call 90929-99686 or 0452-4991516 for consultation hours.

How long is the recovery after a hernia operation?

Walking starts early. Heavy lifting is avoided for a few weeks. Ask your surgeon when you can return to work.

This page gives general information. Please see a doctor for advice about your own health.