பொது அறுவை சிகிச்சைGeneral Surgery
பித்தப்பை கல் அறுவை சிகிச்சைGallbladder Stone Surgery in Madurai
அறிகுறி தரும் பித்தப்பை கற்களுக்கான வழக்கமான சிகிச்சை, பித்தப்பையை நீக்கும் அறுவை சிகிச்சை.
பித்தப்பை கல் என்றால் என்ன?
பித்தப்பை, கல்லீரலுக்குக் கீழே உள்ள சிறிய பை. செரிமானத்துக்கு உதவும் பித்தநீரை அது சேமித்து வைக்கிறது. அந்தப் பித்தநீர் கெட்டியாகி உருவாகும் சிறு கற்களே பித்தப்பை கற்கள் (gallstones).
பித்தப்பை கல் அறிகுறி
பலருக்கு எந்த அறிகுறியும் இருக்காது. சிலருக்கு, கொழுப்பு நிறைந்த உணவுக்குப் பிறகு மேல் வயிற்றின் வலது பக்கத்தில் வலி, குமட்டல், வாந்தி வரலாம்.
காய்ச்சலுடன் வலி இருந்தாலோ, கண்கள் மஞ்சளாக மாறினாலோ, காத்திருக்காமல் மருத்துவமனைக்கு வாருங்கள்.
பித்தப்பை கல் எதனால் வருகிறது?
பித்தநீரில் கொழுப்பு (cholesterol) அதிகமாகும்போது கற்கள் உருவாகின்றன. உடல் எடை அதிகமாக இருப்பது, மிக வேகமாக எடை குறைப்பது, வயது ஆகியவை வாய்ப்பைக் கூட்டுகின்றன. பெண்களுக்கு இது சற்று அதிகம்.
பித்தப்பை கல் கரைய உணவுகள் உண்டா?
உணவால் பித்தப்பை கற்கள் கரைவதில்லை. அறிகுறி இல்லாத கற்களுக்குப் பெரும்பாலும் சிகிச்சை தேவையில்லை. அறிகுறி தரும் கற்களுக்கு அறுவை சிகிச்சையே வழக்கமான தீர்வு.
கல்லின் அளவு முக்கியமா?
அளவை விட, கல் தரும் அறிகுறிகளே முக்கியம். சிறு கற்களும் தொந்தரவு தரலாம். Scan அறிக்கையுடன் டாக்டரிடம் கேட்பதே சரியான வழி.
பித்தப்பை கல் ஆபரேஷன் எப்படிச் செய்யப்படும்?
கற்களுடன் பித்தப்பையும் சேர்த்து நீக்கப்படுகிறது. இதை cholecystectomy என்பார்கள். கற்களை மட்டும் நீக்கினால் அவை மீண்டும் உருவாகும் என்பதால், இதுவே வழக்கமான முறை.
பித்தப்பை இல்லாமல் இயல்பாக வாழ முடியுமா?
முடியும். பித்தநீர் கல்லீரலில்தான் உருவாகிறது. பித்தப்பை நீக்கிய பிறகு, அது நேரடியாகக் குடலுக்குச் செல்கிறது.
அறுவை சிகிச்சைக்குப் பின் உணவு
தொடக்கத்தில் எண்ணெய், கொழுப்பு குறைவான, எளிதில் செரிக்கும் உணவு நல்லது. பிறகு படிப்படியாக வழக்கமான உணவுக்குத் திரும்பலாம்.
எந்த டாக்டரைப் பார்க்க வேண்டும்?
பொது அறுவை சிகிச்சை நிபுணர் (General Surgeon). சுகபிரியாவில், நீண்ட அனுபவம் கொண்ட மூத்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் இருக்கிறார்கள். டாக்டரின் நேரம் தெரிந்துகொள்ள, எங்களை அழைக்கலாம்.
இந்தப் பக்கம் பொதுவான தகவலுக்காக. உங்கள் உடல்நிலைக்கான ஆலோசனையை டாக்டரிடம் நேரில் பெறுங்கள்.

வாங்க, பார்த்துக்கலாம்.
சுகபிரியா மருத்துவமனைLake View Road (80 அடி ரோடு), KK நகர், மதுரை – 625020
சுந்தரம் பார்க் அருகில்
தூங்கா நகரம் மதுரை. நாங்களும் 24 மணி நேரமும் இருக்கிறோம்.
சுகபிரியா பற்றி, இங்கு வந்த குடும்பங்கள் Google-ல் எழுதியதைப் படியுங்கள்.
Google கருத்துகளைப் படிக்கRead our Google reviewsமூத்த நிபுணர்கள்.
நீண்ட அனுபவம்.Senior surgeons with extensive experience
- நிபுணர்General Surgeon
- புதிய Operation TheatreC-Arm
- ICUVentilator
- Lab, Digital X-rayEcho, TMT
- 24 மணி நேரமும்Open 24 hours
வரும்போது, முந்தைய reports, scan, மருந்துச் சீட்டுகளைக் கொண்டு வாருங்கள்.

Gallbladder Stone Surgery in Madurai
Gallstones are small stones that form when bile hardens inside the gall bladder, a small pouch under the liver. Many people have no symptoms. Others get pain in the upper right abdomen, nausea or vomiting, often after a fatty meal.
Diet does not dissolve gallstones. Stones that cause no symptoms usually need no treatment. For stones that do, the standard treatment is gall bladder surgery (cholecystectomy), in which the gall bladder is removed along with the stones. Digestion continues afterwards, because bile flows directly from the liver to the intestine.
At Sugapriya Hospital, KK Nagar, Madurai, gallbladder stone operations are done by senior surgeons with extensive experience. The new operation theatre, a critical care ICU, lab and digital X-ray are in the same building. The hospital is open 24 hours.
Can the stones alone be removed?
The gall bladder is removed together with the stones, because stones form again if it is left in place.
Which doctor treats gallbladder stones?
A general surgeon. Call 90929-99686 or 0452-4991516 for consultation hours.
This page gives general information. Please see a doctor for advice about your own health.
மற்ற அறுவை சிகிச்சைகள்Other surgeries at Sugapriya Hospital, Madurai
- குடல்வால் அறுவை சிகிச்சைAppendix Operation
- குடலிறக்கம் அறுவை சிகிச்சைHernia Surgery
- விரை வீக்கம் அறுவை சிகிச்சைHydrocele Surgery
- மூல நோய் சிகிச்சைPiles Treatment
- ஆசனவாய் வெடிப்பு சிகிச்சைFissure Treatment
- பவுத்திரம் அறுவை சிகிச்சைFistula Surgery
- சுன்னத், முன்தோல் நீக்கம்Circumcision
- கொழுப்பு கட்டி அகற்றுதல்Lipoma and Cyst Removal
- முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைKnee Replacement
- கர்ப்பப்பை நீக்கம்Hysterectomy (Uterus Removal Surgery)
- கர்ப்பப்பை கட்டி (நார்த்திசுக் கட்டி) அகற்றுதல்Fibroid Removal
- சினைப்பை நீர்க்கட்டி அறுவை சிகிச்சைOvarian Cyst Surgery
