மகளிர் அறுவை சிகிச்சைWomen’s Surgery (Gynaecology)
சினைப்பை நீர்க்கட்டி அறுவை சிகிச்சைOvarian Cyst Surgery in Madurai
பல சினைப்பை நீர்க்கட்டிகள், குறிப்பாகப் பொதுவான வகை, தானாகவே மறைகின்றன. தேவைப்படும்போது, கட்டியை மட்டும் அகற்றும் அறுவை சிகிச்சை.
சினைப்பை நீர்க்கட்டி என்றால் என்ன?
சினைப்பையில் (ovary) உருவாகும், நீர் நிரம்பிய பை. ஆங்கிலத்தில் ovarian cyst. சிலர் இதைக் கர்ப்பப்பை நீர்க்கட்டி என்றும் சொல்வார்கள்; உண்மையில் இது சினைப்பையில் வருவது. பெரும்பாலானவை தீங்கற்றவை.
சினைப்பை நீர்க்கட்டி அறிகுறிகள்
பலருக்கு எந்த அறிகுறியும் இருக்காது; வேறு காரணத்துக்காக scan செய்யும்போது தெரியவரும். சிலருக்கு அடிவயிற்றின் ஒரு பக்கத்தில் வலி அல்லது கனம், வயிறு உப்புசம், மாதவிடாய் மாற்றங்கள் இருக்கலாம்.
அடிவயிற்றில் திடீரென கடும் வலியுடன் வாந்தி அல்லது காய்ச்சல் இருந்தால், காத்திருக்காமல் மருத்துவமனைக்கு வாருங்கள். சுகபிரியா 24 மணி நேரமும் திறந்திருக்கிறது.
சினைப்பை நீர்க்கட்டி வகைகள்
- மாதவிடாய்ச் சுழற்சியோடு உருவாகி, சில மாதங்களில் தானாக மறைபவை (functional cyst). இவையே மிகவும் பொதுவானவை.
- endometrioma (chocolate cyst), dermoid cyst போன்றவை. இவை தானாக மறைவதில்லை.
சினைப்பை நீர்க்கட்டியும் PCOD-யும் ஒன்றா?
இல்லை. PCOD (PCOS) ஒரு ஹார்மோன் நிலை; அதில் சினைப்பையில் பல சிறிய கட்டிகள் போலத் தெரியும். அதற்குப் பொதுவாக அறுவை சிகிச்சை தேவையில்லை; உணவு, உடற்பயிற்சி, மருந்துகள் உதவுகின்றன.
அறுவை சிகிச்சை எப்போது தேவை?
நீர்க்கட்டி பெரிதாக இருக்கும்போது, சில மாதங்களுக்குப் பிறகும் மறையாதபோது, வலி தரும்போது, அல்லது scan-இல் கூடுதல் பரிசோதனை தேவைப்படும் தோற்றம் இருக்கும்போது.
சினைப்பை நீர்க்கட்டி அறுவை சிகிச்சை எப்படிச் செய்யப்படும்?
பெரும்பாலும், சினைப்பையைப் பாதுகாத்து, நீர்க்கட்டியை மட்டும் அகற்றுகிறார்கள் (ovarian cystectomy). சிலருக்கு, சினைப்பையும் சேர்த்து அகற்றப்படலாம். உங்களுக்கு ஏற்ற முறையை டாக்டர் விளக்குவார். அகற்றிய கட்டி பரிசோதனைக்கு அனுப்பப்படும்.
அறுவை சிகிச்சைக்குப் பின்
சில நாட்கள் ஓய்வு. சில வாரங்களுக்குக் கனமான பொருட்களைத் தூக்க வேண்டாம். பின்தொடர் scan எப்போது என்பதை டாக்டர் சொல்வார்.
எந்த டாக்டரைப் பார்க்க வேண்டும்?
மகளிர் நல மருத்துவர் (Gynaecologist). சுகபிரியாவில், நீண்ட அனுபவம் கொண்ட மூத்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் இருக்கிறார்கள். தனியுரிமை (privacy) காக்கும், பெண்களுக்கு ஏற்ற கவனிப்பு. டாக்டர் பார்க்கும் நேரத்தைத் தெரிந்துகொள்ள, எங்களை அழைக்கலாம். வரும்போது scan அறிக்கைகளைக் கொண்டு வாருங்கள்.
இந்தப் பக்கம் பொதுவான தகவலுக்காக. உங்கள் உடல்நிலைக்கான ஆலோசனையை டாக்டரிடம் நேரில் பெறுங்கள்.

வாங்க, பார்த்துக்கலாம்.
சுகபிரியா மருத்துவமனைLake View Road (80 அடி ரோடு), KK நகர், மதுரை – 625020
சுந்தரம் பார்க் அருகில்
தூங்கா நகரம் மதுரை. நாங்களும் 24 மணி நேரமும் இருக்கிறோம்.
சுகபிரியா பற்றி, இங்கு வந்த குடும்பங்கள் Google-ல் எழுதியதைப் படியுங்கள்.
Google கருத்துகளைப் படிக்கRead our Google reviewsமூத்த நிபுணர்கள்.
நீண்ட அனுபவம்.Senior surgeons with extensive experience
- நிபுணர்Gynaecologist
- புதிய Operation TheatreC-Arm
- ICUVentilator
- Lab, Digital X-rayEcho, TMT
- 24 மணி நேரமும்Open 24 hours
வரும்போது, முந்தைய reports, scan, மருந்துச் சீட்டுகளைக் கொண்டு வாருங்கள்.

Ovarian Cyst Surgery in Madurai
An ovarian cyst is a fluid-filled sac in the ovary. Most are harmless, and the common type (functional cyst) goes away on its own within a few months. Many cause no symptoms; some cause pain or heaviness on one side of the lower abdomen, bloating or changes in periods. PCOD (PCOS) is a different, hormonal condition that usually does not need surgery.
Ovarian cyst surgery is advised when a cyst is large, does not go away, causes pain, or looks unusual on a scan. Most often only the cyst is removed and the ovary is kept (ovarian cystectomy).
At Sugapriya Hospital, KK Nagar, Madurai, ovarian cyst surgery is done in a new operation theatre by senior surgeons with extensive experience, with private, women-friendly care. The hospital is open 24 hours.
Do all ovarian cysts need surgery?
No. Many ovarian cysts, especially the common functional type, go away on their own and only need a follow-up scan. Surgery is for cysts that are large, painful, lasting or unusual on a scan.
Which doctor treats an ovarian cyst?
A gynaecologist. Bring your scan reports. Call 90929-99686 or 0452-4991516 for consultation hours.
This page gives general information. Please see a doctor for advice about your own health.
மற்ற அறுவை சிகிச்சைகள்Other surgeries at Sugapriya Hospital, Madurai
- கர்ப்பப்பை கட்டி (நார்த்திசுக் கட்டி) அகற்றுதல்Fibroid Removal
- கர்ப்பப்பை நீக்கம்Hysterectomy (Uterus Removal Surgery)
- குடலிறக்கம் அறுவை சிகிச்சைHernia Surgery
- விரை வீக்கம் அறுவை சிகிச்சைHydrocele Surgery
- மூல நோய் சிகிச்சைPiles Treatment
- ஆசனவாய் வெடிப்பு சிகிச்சைFissure Treatment
- பவுத்திரம் அறுவை சிகிச்சைFistula Surgery
- சுன்னத், முன்தோல் நீக்கம்Circumcision
- கொழுப்பு கட்டி அகற்றுதல்Lipoma and Cyst Removal
- பித்தப்பை கல் ஆபரேஷன்Gallbladder Stone Surgery
- குடல்வால் அறுவை சிகிச்சைAppendix Operation
- முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைKnee Replacement
