எலும்பு, மூட்டுOrthopaedic Surgery
முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைKnee Replacement Surgery in Madurai
தேய்ந்த முழங்கால் மூட்டுக்குப் பதிலாக, செயற்கை மூட்டு பொருத்தும் அறுவை சிகிச்சை. பிசியோதெரபியும் இங்கேயே.
முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன?
தேய்ந்து போன முழங்கால் மூட்டின் மேற்பரப்புகள் அகற்றப்பட்டு, அவற்றின் இடத்தில் உலோகமும் மருத்துவ பிளாஸ்டிக்கும் கொண்ட செயற்கை மூட்டு (implant) பொருத்தப்படுகிறது. ஆங்கிலத்தில் knee replacement. இதையே மூட்டு மாற்று அறுவை சிகிச்சை என்றும் சொல்வார்கள்.
முழங்கால் மூட்டு வலி: எப்போது மூட்டு மாற்று தேவை?
மூட்டு தேய்மானம் (osteoarthritis) முற்றிய நிலையில், மருந்துகள், பிசியோதெரபி, எடைக் குறைப்பு போதாதபோது பரிந்துரைக்கப்படுகிறது. நடப்பது, படி ஏறுவது, தரையில் உட்காருவது, இரவுத் தூக்கம் ஆகியவை வலியால் பாதிக்கப்படும்போது, X-ray பார்த்து டாக்டர் முடிவு செய்வார்.
முழங்கால் திடீரென வீங்கி, சிவந்து, காய்ச்சலுடன் வலித்தால், காத்திருக்காமல் மருத்துவமனைக்கு வாருங்கள். சுகபிரியா 24 மணி நேரமும் திறந்திருக்கிறது.
முழங்கால் வலி சிகிச்சை: அறுவை சிகிச்சை இல்லாமல்
தொடக்க நிலையில் இவையே பெரும்பாலும் போதும்:
- உடல் எடையைக் குறைத்தல்.
- தொடைத் தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள், பிசியோதெரபி.
- டாக்டர் எழுதித் தரும் வலி மருந்துகள்.
- சிலருக்கு மூட்டில் ஊசி (injection).
முழங்கால் மூட்டு தேய்மானம் வர காரணம்
வயது, உடல் எடை அதிகமாக இருப்பது, முன்பு மூட்டில் அடிபட்டது, முடக்கு வாதம் (rheumatoid arthritis), பரம்பரை ஆகியவை காரணமாகலாம். பெண்களுக்கு இது சற்று அதிகம்.
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை எப்படிச் செய்யப்படும்?
இடுப்புக்குக் கீழே மரத்துப்போகச் செய்யும் ஊசி (spinal anaesthesia) அல்லது மயக்க மருந்து தரப்படும். தேய்ந்த பகுதிகள் அகற்றப்பட்டு, செயற்கை மூட்டு பொருத்தப்படுகிறது. ஒரு முழங்காலுக்கா, இரண்டுக்குமா என்பதை உங்கள் உடல்நிலையைப் பொறுத்து அறுவை சிகிச்சை நிபுணர் விளக்குவார்.
அறுவை சிகிச்சைக்குப் பின்: பிசியோதெரபி
பெரும்பாலும் ஓரிரு நாட்களில் walker உதவியுடன் நடக்கத் தொடங்கலாம். தினமும் செய்யும் பிசியோதெரபிப் பயிற்சிகளே மூட்டு நன்றாக மடங்க உதவுகின்றன. சுகபிரியாவில் பிசியோதெரபியும் இருக்கிறது. அன்றாட வேலைகளுக்கு எப்போது திரும்பலாம் என்பதை டாக்டர் சொல்வார்.
குணமாக எவ்வளவு காலம் ஆகும்?
பலர் சில வாரங்களில் துணையின்றி நடக்கத் தொடங்குகிறார்கள். மூட்டு முழுமையாகப் பழக சில மாதங்கள் ஆகலாம். இது வயது, உடல்நிலை, பயிற்சிகளைப் பொறுத்து மாறும்.
எந்த டாக்டரைப் பார்க்க வேண்டும்?
எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் (Orthopaedic Surgeon). சுகபிரியாவில், நீண்ட அனுபவம் கொண்ட மூத்த எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் இருக்கிறார்கள். வரும்போது முழங்கால் X-ray இருந்தால் கொண்டு வாருங்கள். டாக்டர் பார்க்கும் நேரத்தைத் தெரிந்துகொள்ள, எங்களை அழைக்கலாம்.
இந்தப் பக்கம் பொதுவான தகவலுக்காக. உங்கள் உடல்நிலைக்கான ஆலோசனையை டாக்டரிடம் நேரில் பெறுங்கள்.

வாங்க, பார்த்துக்கலாம்.
சுகபிரியா மருத்துவமனைLake View Road (80 அடி ரோடு), KK நகர், மதுரை – 625020
சுந்தரம் பார்க் அருகில்
தூங்கா நகரம் மதுரை. நாங்களும் 24 மணி நேரமும் இருக்கிறோம்.
சுகபிரியா பற்றி, இங்கு வந்த குடும்பங்கள் Google-ல் எழுதியதைப் படியுங்கள்.
Google கருத்துகளைப் படிக்கRead our Google reviewsமூத்த நிபுணர்கள்.
நீண்ட அனுபவம்.Senior surgeons with extensive experience
- நிபுணர்Orthopaedic Surgeon
- புதிய Operation TheatreC-Arm
- ICUVentilator
- Lab, Digital X-rayEcho, TMT
- 24 மணி நேரமும்Open 24 hours
வரும்போது, முந்தைய reports, scan, மருந்துச் சீட்டுகளைக் கொண்டு வாருங்கள்.

Knee Replacement Surgery in Madurai
Knee replacement is an operation in which the worn surfaces of the knee joint are removed and replaced with an artificial joint (implant) made of metal and medical-grade plastic. It is advised for advanced knee arthritis (osteoarthritis) when medicines, physiotherapy and weight loss no longer control the pain, and walking, climbing stairs or sleep are affected.
Early knee pain is usually managed without surgery: weight loss, exercises that strengthen the thigh muscles, physiotherapy, pain medicines and, for some people, injections.
At Sugapriya Hospital, KK Nagar, Madurai, knee replacement is done by senior orthopaedic surgeons with extensive experience, in a new operation theatre, with physiotherapy in the same building.
How long is the recovery after knee replacement?
Most people start walking with a walker within a day or two. Many walk without support after some weeks, and the knee settles fully over a few months. Daily physiotherapy is the most important part of recovery.
Which doctor should I see for knee pain in Madurai?
An orthopaedic surgeon. Bring any knee X-rays you have. Call 90929-99686 or 0452-4991516 for consultation hours.
This page gives general information. Please see a doctor for advice about your own health.
மற்ற அறுவை சிகிச்சைகள்Other surgeries at Sugapriya Hospital, Madurai
- குடலிறக்கம் அறுவை சிகிச்சைHernia Surgery
- விரை வீக்கம் அறுவை சிகிச்சைHydrocele Surgery
- மூல நோய் சிகிச்சைPiles Treatment
- ஆசனவாய் வெடிப்பு சிகிச்சைFissure Treatment
- பவுத்திரம் அறுவை சிகிச்சைFistula Surgery
- சுன்னத், முன்தோல் நீக்கம்Circumcision
- கொழுப்பு கட்டி அகற்றுதல்Lipoma and Cyst Removal
- பித்தப்பை கல் ஆபரேஷன்Gallbladder Stone Surgery
- குடல்வால் அறுவை சிகிச்சைAppendix Operation
- கர்ப்பப்பை நீக்கம்Hysterectomy (Uterus Removal Surgery)
- கர்ப்பப்பை கட்டி (நார்த்திசுக் கட்டி) அகற்றுதல்Fibroid Removal
- சினைப்பை நீர்க்கட்டி அறுவை சிகிச்சைOvarian Cyst Surgery
