Sugapriya Hospital, Madurai

90929-99686 0452-4991516

24 மணி நேரமும்

மகளிர் அறுவை சிகிச்சைWomen’s Surgery (Gynaecology)

கர்ப்பப்பை நீக்கம் அறுவை சிகிச்சைHysterectomy (Uterus Removal Surgery) in Madurai

கர்ப்பப்பையை அகற்றும் அறுவை சிகிச்சை. தனியுரிமை (privacy) காக்கும், பெண்களுக்கு ஏற்ற கவனிப்புடன்.

கர்ப்பப்பை நீக்கம் என்றால் என்ன?

அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பையை (uterus) அகற்றுவதே கர்ப்பப்பை நீக்கம். ஆங்கிலத்தில் hysterectomy. காரணத்தைப் பொறுத்து, கர்ப்பப்பை வாயும் (cervix) சினைப்பைகளும் சேர்த்து அகற்றப்படலாம்.

எப்போது பரிந்துரைக்கப்படுகிறது?

  • கர்ப்பப்பை கட்டி (fibroids) தொந்தரவு தரும்போது.
  • அதிகமான அல்லது நீண்ட நாள் மாதவிடாய் ரத்தப்போக்கு மருந்துகளால் கட்டுப்படாதபோது.
  • கர்ப்பப்பை கீழே இறங்கும்போது (uterine prolapse).
  • கர்ப்பப்பையின் உட்புறத் திசு, தசைக்குள்ளோ வெளியிலோ வளரும் நிலைகளில் (adenomyosis, endometriosis).

மாதவிடாய் நின்ற பிறகு ரத்தப்போக்கு வந்தால், தாமதிக்காமல் டாக்டரைப் பாருங்கள்.

கர்ப்பப்பை நீக்காமல் வேறு வழிகள் உண்டா?

எல்லோருக்கும் கர்ப்பப்பை நீக்கம் தேவைப்படுவதில்லை. மருந்துகள், ஹார்மோன் சிகிச்சை, கட்டியை மட்டும் அகற்றுதல் போன்ற வழிகளும் உண்டு. பரிசோதித்த பிறகு, உங்களுக்கு ஏற்ற வழியை டாக்டர் விளக்குவார்.

கர்ப்பப்பை நீக்கம் எப்படிச் செய்யப்படும்?

வயிற்றின் கீழ்ப் பகுதியில் கீறல் செய்து (abdominal hysterectomy), அல்லது பிறப்புறுப்பு வழியாக (vaginal hysterectomy) கர்ப்பப்பை அகற்றப்படுகிறது. எந்த முறை என்பது காரணம், கர்ப்பப்பையின் அளவு, உடல்நிலை ஆகியவற்றைப் பொறுத்தது.

சினைப்பைகளும் நீக்கப்படுமா?

எல்லோருக்கும் இல்லை. வயது, காரணம் ஆகியவற்றைப் பொறுத்து, சினைப்பைகள் அப்படியே விடப்படலாம். அறுவை சிகிச்சைக்கு முன்பே டாக்டர் இதை விளக்குவார்.

அறுவை சிகிச்சைக்குப் பின்

விரைவிலேயே, மெதுவாக நடக்கத் தொடங்கலாம். சில வாரங்களுக்குக் கனமான பொருட்களைத் தூக்க வேண்டாம். கர்ப்பப்பை நீக்கிய பிறகு மாதவிடாய் வருவதில்லை. எப்போது அன்றாட வேலைகளுக்குத் திரும்பலாம் என்பதை டாக்டரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

குணமாக எவ்வளவு காலம் ஆகும்?

பெரும்பாலும் சில வாரங்களில் அன்றாட வேலைகளுக்குத் திரும்பலாம். முழுமையாக ஆறுவது, அறுவை சிகிச்சை முறையையும் உடல்நிலையையும் பொறுத்து மாறும்.

எந்த டாக்டரைப் பார்க்க வேண்டும்?

மகளிர் நல மருத்துவர் (Gynaecologist). சுகபிரியாவில், நீண்ட அனுபவம் கொண்ட மூத்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் இருக்கிறார்கள். தனியுரிமை (privacy) காக்கும், பெண்களுக்கு ஏற்ற கவனிப்பு. டாக்டர் பார்க்கும் நேரத்தைத் தெரிந்துகொள்ள, எங்களை அழைக்கலாம்.

இந்தப் பக்கம் பொதுவான தகவலுக்காக. உங்கள் உடல்நிலைக்கான ஆலோசனையை டாக்டரிடம் நேரில் பெறுங்கள்.

“உயர்ந்த நலம், நிரந்தர ஆரோக்கியம்” — The outpatient entrance of Sugapriya Hospital

வாங்க, பார்த்துக்கலாம்.

சுகபிரியா மருத்துவமனைLake View Road (80 அடி ரோடு), KK நகர், மதுரை – 625020
சுந்தரம் பார்க் அருகில்

தூங்கா நகரம் மதுரை. நாங்களும் 24 மணி நேரமும் இருக்கிறோம்.

சுகபிரியா பற்றி, இங்கு வந்த குடும்பங்கள் Google-ல் எழுதியதைப் படியுங்கள்.

Google கருத்துகளைப் படிக்கRead our Google reviews

மூத்த நிபுணர்கள்.
நீண்ட அனுபவம்.Senior surgeons with extensive experience

  • நிபுணர்Gynaecologist
  • புதிய Operation TheatreC-Arm
  • ICUVentilator
  • Lab, Digital X-rayEcho, TMT
  • 24 மணி நேரமும்Open 24 hours

வரும்போது, முந்தைய reports, scan, மருந்துச் சீட்டுகளைக் கொண்டு வாருங்கள்.

புதிய Operation Theatre, C-Arm — The new operation theatre with C-arm at Sugapriya Hospital
புதிய Operation Theatre. உங்களுக்கும், உடன் வரும் குடும்பத்துக்கும் அதே அக்கறை.

Hysterectomy (Uterus Removal Surgery) in Madurai

A hysterectomy is an operation to remove the uterus. Depending on the reason, the cervix and the ovaries may also be removed. It is advised for fibroids that cause trouble, heavy or prolonged periods that medicines do not control, uterine prolapse, and conditions such as adenomyosis and endometriosis.

Not everyone needs a hysterectomy: medicines, hormone treatment or removing only the fibroid are other options. The uterus is removed through a cut in the lower abdomen (abdominal hysterectomy) or through the vagina (vaginal hysterectomy). After a hysterectomy, periods stop.

At Sugapriya Hospital, KK Nagar, Madurai, hysterectomy is done in a new operation theatre by senior surgeons with extensive experience, with privacy, women-friendly care and attentive nursing.

What is the recovery time after uterus removal surgery?

Walking starts early. Heavy lifting is avoided for some weeks, and most women return to daily work within a few weeks. Ask your doctor about your own recovery.

Which doctor should I see?

A gynaecologist. Call 90929-99686 or 0452-4991516 for consultation hours.

This page gives general information. Please see a doctor for advice about your own health.