சிறுநீரகவியல்Urology
விரை வீக்கம் (ஹைட்ரோசில்) அறுவை சிகிச்சைHydrocele Surgery in Madurai
விரைப்பையில் நீர் சேர்வதால் ஏற்படும் வீக்கத்தைச் சரிசெய்யும் சிறிய அறுவை சிகிச்சை.
விரை வீக்கம் (ஹைட்ரோசில்) என்றால் என்ன?
விரையைச் சுற்றியுள்ள மெல்லிய உறையில் நீர் சேர்வதால் விரைப்பை வீங்குகிறது. இதுவே ஹைட்ரோசில் (hydrocele). பெரும்பாலும் இது வலி இல்லாத வீக்கம்.
விரை வீக்கம் அறிகுறிகள்
விரைப்பையின் ஒரு பக்கத்தில் அல்லது இரு பக்கங்களிலும் மெதுவாக வளரும் வீக்கம். பெரிதாகும்போது கனமாக உணரலாம்.
வீக்கம் திடீரென வந்தாலோ, வலி இருந்தாலோ, காத்திருக்காமல் டாக்டரைப் பாருங்கள்.
விரை வீக்கம் வர காரணம்
பெரியவர்களுக்கு, பெரும்பாலும் தெளிவான காரணம் இல்லாமலே வரலாம். சிலருக்கு அடிபட்ட பிறகு அல்லது தொற்றுக்குப் பிறகு வரலாம்.
மருந்தால் குணமாகுமா?
பெரியவர்களின் ஹைட்ரோசிலை மருந்துகள் குறைப்பதில்லை. சிறியதாக, தொந்தரவு இல்லாமல் இருந்தால் கவனித்துக்கொண்டு இருக்கலாம். பெரிதாகி அன்றாட வேலைகளுக்கு இடையூறாக இருந்தால், அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
ஹைட்ரோசில் ஆபரேஷன் எப்படிச் செய்யப்படும்?
சேர்ந்த நீர் வெளியேற்றப்பட்டு, நீர் மீண்டும் சேராதபடி உறை சரிசெய்யப்படுகிறது. இதை hydrocelectomy என்பார்கள். இது ஒரு சிறிய அறுவை சிகிச்சை.
ஹைட்ரோசில் அறுவை சிகிச்சைக்குப் பின்
சில நாட்கள் ஓய்வு தேவை. தாங்கும் உள்ளாடை அணிவது உதவும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு சில நாட்கள் லேசான வீக்கம் இருப்பது இயல்பு. எப்போது வேலைக்குத் திரும்பலாம் என்பதை டாக்டரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.
ஹைட்ரோசிலா, குடலிறக்கமா?
விரைப்பையில் வரும் வீக்கம், சிலருக்கு குடலிறக்கமாகவும் இருக்கலாம்; வேறு காரணங்களாலும் வரலாம். பரிசோதித்த பிறகே எது என்று உறுதியாகத் தெரியும்.
குழந்தைகளுக்கு வரும் ஹைட்ரோசில்
பிறந்த குழந்தைகளுக்கு வரும் ஹைட்ரோசில், பெரும்பாலும் முதல் ஓரிரு ஆண்டுகளில் தானாகவே மறைகிறது. குழந்தை நல டாக்டரிடம் காட்டி உறுதி செய்துகொள்ளலாம்.
எந்த டாக்டரைப் பார்க்க வேண்டும்?
பொது அறுவை சிகிச்சை நிபுணர் (General Surgeon) அல்லது சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் (Urologist). சுகபிரியாவில், நீண்ட அனுபவம் கொண்ட மூத்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் இருக்கிறார்கள். தயக்கம் வேண்டாம்; ஆண்களுக்கு இது பொதுவாக வரும் ஒன்று.
இந்தப் பக்கம் பொதுவான தகவலுக்காக. உங்கள் உடல்நிலைக்கான ஆலோசனையை டாக்டரிடம் நேரில் பெறுங்கள்.

வாங்க, பார்த்துக்கலாம்.
சுகபிரியா மருத்துவமனைLake View Road (80 அடி ரோடு), KK நகர், மதுரை – 625020
சுந்தரம் பார்க் அருகில்
தூங்கா நகரம் மதுரை. நாங்களும் 24 மணி நேரமும் இருக்கிறோம்.
சுகபிரியா பற்றி, இங்கு வந்த குடும்பங்கள் Google-ல் எழுதியதைப் படியுங்கள்.
Google கருத்துகளைப் படிக்கRead our Google reviewsமூத்த நிபுணர்கள்.
நீண்ட அனுபவம்.Senior surgeons with extensive experience
- நிபுணர்கள்General Surgeon, Urologist
- புதிய Operation TheatreC-Arm
- ICUVentilator
- Lab, Digital X-rayEcho, TMT
- 24 மணி நேரமும்Open 24 hours
வரும்போது, முந்தைய reports, scan, மருந்துச் சீட்டுகளைக் கொண்டு வாருங்கள்.

Hydrocele Surgery in Madurai
A hydrocele is a collection of fluid in the thin sac around a testicle, which makes the scrotum swell. It is usually painless and grows slowly, on one side or on both.
Medicines do not reduce a hydrocele in adults. A small hydrocele that causes no trouble can simply be watched. When it becomes large or gets in the way of daily work, a hydrocele operation (hydrocelectomy) is advised: the fluid is drained and the sac is repaired so that it does not fill again. It is a minor operation.
At Sugapriya Hospital, KK Nagar, Madurai, hydrocele surgery is done in a new operation theatre by senior surgeons with extensive experience. The hospital is open 24 hours.
Can a hydrocele be treated without surgery?
In adults, tablets and medicines do not remove the fluid. A small, painless hydrocele may only need to be watched. Surgery is the treatment when the swelling is large or uncomfortable.
Is a swelling in the scrotum always a hydrocele?
No. It can also be a hernia or another condition. An examination tells them apart.
Which doctor treats a hydrocele?
A general surgeon or a urologist. Call 90929-99686 or 0452-4991516 for consultation hours.
This page gives general information. Please see a doctor for advice about your own health.
மற்ற அறுவை சிகிச்சைகள்Other surgeries at Sugapriya Hospital, Madurai
- குடலிறக்கம் அறுவை சிகிச்சைHernia Surgery
- சுன்னத், முன்தோல் நீக்கம்Circumcision
- மூல நோய் சிகிச்சைPiles Treatment
- ஆசனவாய் வெடிப்பு சிகிச்சைFissure Treatment
- பவுத்திரம் அறுவை சிகிச்சைFistula Surgery
- கொழுப்பு கட்டி அகற்றுதல்Lipoma and Cyst Removal
- பித்தப்பை கல் ஆபரேஷன்Gallbladder Stone Surgery
- குடல்வால் அறுவை சிகிச்சைAppendix Operation
- முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைKnee Replacement
- கர்ப்பப்பை நீக்கம்Hysterectomy (Uterus Removal Surgery)
- கர்ப்பப்பை கட்டி (நார்த்திசுக் கட்டி) அகற்றுதல்Fibroid Removal
- சினைப்பை நீர்க்கட்டி அறுவை சிகிச்சைOvarian Cyst Surgery
