பொது அறுவை சிகிச்சைGeneral Surgery
குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) அறுவை சிகிச்சைAppendix Operation in Madurai
குடல்வாலில் அழற்சி ஏற்படும்போது, அதை நீக்கும் அறுவை சிகிச்சை.
குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) என்றால் என்ன?
பெருங்குடலின் தொடக்கத்தில் இணைந்துள்ள, விரல் அளவுள்ள சிறிய உறுப்பு. வயிற்றின் வலது கீழ்ப் பகுதியில் உள்ளது. Appendix என்பது உறுப்பின் பெயர். அதில் ஏற்படும் அழற்சியே குடல்வால் அழற்சி (appendicitis).
குடல்வால் அழற்சி அறிகுறிகள்
தொப்புளைச் சுற்றித் தொடங்கி, வலது அடிவயிற்றுக்கு நகரும் வலி. குமட்டல், வாந்தி, லேசான காய்ச்சல், பசியின்மை.
இந்த அறிகுறிகள் இருந்தால், காத்திருக்காமல் மருத்துவமனைக்கு வாருங்கள். சுகபிரியா 24 மணி நேரமும் திறந்திருக்கிறது.
குடல்வால் அழற்சி ஏற்பட காரணம்
குடல்வாலின் உள்ளே அடைப்பு ஏற்படும்போது அழற்சி உண்டாகிறது. இது எந்த வயதிலும் வரலாம்; இளம் வயதினருக்குச் சற்று அதிகம்.
மருந்தால் மட்டும் சரியாகுமா?
சிலருக்கு மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். ஆனால் அறுவை சிகிச்சையே வழக்கமான சிகிச்சை. பரிசோதித்த பிறகு, எது ஏற்றது என்று டாக்டர் முடிவு செய்வார்.
அப்பெண்டிக்ஸ் ஆபரேஷன் எப்படிச் செய்யப்படும்?
அழற்சி அடைந்த குடல்வால் முழுவதுமாக நீக்கப்படுகிறது. இதை appendectomy என்பார்கள்.
குடல்வால் இல்லாமல் வாழலாமா?
வாழலாம். குடல்வாலை நீக்குவதால் செரிமானத்தில் மாற்றம் இல்லை.
குடல்வால் அறுவை சிகிச்சைக்குப் பின்
சீக்கிரமே மெதுவாக நடக்கத் தொடங்கலாம். வழக்கமான உணவுக்குப் படிப்படியாகத் திரும்பலாம். சில வாரங்களுக்குக் கனமான வேலைகளைத் தவிர்க்கவும்.
எந்த டாக்டரைப் பார்க்க வேண்டும்?
பொது அறுவை சிகிச்சை நிபுணர் (General Surgeon). சுகபிரியாவில், நீண்ட அனுபவம் கொண்ட மூத்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் இருக்கிறார்கள். மருத்துவமனை 24 மணி நேரமும் திறந்திருக்கிறது.
இந்தப் பக்கம் பொதுவான தகவலுக்காக. உங்கள் உடல்நிலைக்கான ஆலோசனையை டாக்டரிடம் நேரில் பெறுங்கள்.

வாங்க, பார்த்துக்கலாம்.
சுகபிரியா மருத்துவமனைLake View Road (80 அடி ரோடு), KK நகர், மதுரை – 625020
சுந்தரம் பார்க் அருகில்
தூங்கா நகரம் மதுரை. நாங்களும் 24 மணி நேரமும் இருக்கிறோம்.
சுகபிரியா பற்றி, இங்கு வந்த குடும்பங்கள் Google-ல் எழுதியதைப் படியுங்கள்.
Google கருத்துகளைப் படிக்கRead our Google reviewsமூத்த நிபுணர்கள்.
நீண்ட அனுபவம்.Senior surgeons with extensive experience
- நிபுணர்General Surgeon
- புதிய Operation TheatreC-Arm
- ICUVentilator
- Lab, Digital X-rayEcho, TMT
- 24 மணி நேரமும்Open 24 hours
வரும்போது, முந்தைய reports, scan, மருந்துச் சீட்டுகளைக் கொண்டு வாருங்கள்.

Appendix Operation in Madurai
The appendix is a small, finger-sized pouch attached to the start of the large intestine, in the lower right abdomen. Appendicitis is inflammation of the appendix. It usually begins as pain around the navel that moves to the lower right abdomen, with nausea, vomiting, mild fever and loss of appetite.
The standard treatment is an appendix operation (appendectomy, also called appendix removal), in which the inflamed appendix is removed. Digestion is not affected afterwards. Anyone with these symptoms should come to hospital without waiting.
Sugapriya Hospital, KK Nagar, Madurai is open 24 hours. Appendix operations are done by senior surgeons with extensive experience. The new operation theatre, a critical care ICU, lab and digital X-ray are in the same building.
Can appendicitis be treated with medicines alone?
Medicines are advised for some people, but an operation remains the standard treatment. The doctor decides after examining you.
How long is the recovery after an appendix operation?
Walking starts early, and you return to normal food step by step. Heavy work is avoided for a few weeks.
Which doctor does an appendix operation?
A general surgeon. Sugapriya Hospital is open 24 hours. Call 90929-99686 or 0452-4991516.
This page gives general information. Please see a doctor for advice about your own health.
மற்ற அறுவை சிகிச்சைகள்Other surgeries at Sugapriya Hospital, Madurai
- பித்தப்பை கல் ஆபரேஷன்Gallbladder Stone Surgery
- குடலிறக்கம் அறுவை சிகிச்சைHernia Surgery
- விரை வீக்கம் அறுவை சிகிச்சைHydrocele Surgery
- மூல நோய் சிகிச்சைPiles Treatment
- ஆசனவாய் வெடிப்பு சிகிச்சைFissure Treatment
- பவுத்திரம் அறுவை சிகிச்சைFistula Surgery
- சுன்னத், முன்தோல் நீக்கம்Circumcision
- கொழுப்பு கட்டி அகற்றுதல்Lipoma and Cyst Removal
- முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைKnee Replacement
- கர்ப்பப்பை நீக்கம்Hysterectomy (Uterus Removal Surgery)
- கர்ப்பப்பை கட்டி (நார்த்திசுக் கட்டி) அகற்றுதல்Fibroid Removal
- சினைப்பை நீர்க்கட்டி அறுவை சிகிச்சைOvarian Cyst Surgery
