பொது அறுவை சிகிச்சைGeneral Surgery
ஆசனவாய் வெடிப்பு (ஃபிஷர்) சிகிச்சைFissure Treatment and Surgery in Madurai
பெரும்பாலான ஆசனவாய் வெடிப்புகள், உணவு மாற்றத்தாலும் மருந்துகளாலும் ஆறுகின்றன. நீண்ட நாள் ஆறாத வெடிப்புக்கு, சிறிய அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
ஆசனவாய் வெடிப்பு (ஃபிஷர்) என்றால் என்ன?
ஆசனவாயின் உட்புறத்தில் உள்ள மெல்லிய தோலில் ஏற்படும் சிறு கீறல். ஆங்கிலத்தில் anal fissure அல்லது fissure in ano. ஆசனவாய் பிளவு என்றும் சொல்வார்கள்.
ஆசனவாய் வெடிப்பு அறிகுறிகள்
மலம் கழிக்கும்போதும், அதன் பிறகும் ஆசனவாயில் வலி அல்லது எரிச்சல்; சிலருக்கு இது சில மணி நேரம் நீடிக்கலாம். மலத்தின் மேலோ, கழுவும்போதோ சிறிதளவு சிவப்பு ரத்தம். நீண்ட நாள் வெடிப்பில், அதன் அருகே சிறு தோல் வளர்ச்சி தெரியலாம்.
ரத்தம் தொடர்ந்து வந்தால், வெடிப்புதான் என்று நீங்களே முடிவு செய்யாமல் டாக்டரிடம் காட்டுங்கள்.
ஆசனவாய் வெடிப்பு காரணம் என்ன?
கெட்டியான மலம், நீண்ட நாள் மலச்சிக்கல், மலம் கழிக்கும்போது அதிகம் முக்குதல் ஆகியவை முக்கியக் காரணங்கள். நீடித்த வயிற்றுப்போக்குக்குப் பிறகும், பிரசவத்துக்குப் பிறகும் வரலாம்.
ஆசனவாய் வெடிப்பு குணமாக என்ன செய்யலாம்?
- நார்ச்சத்து நிறைந்த உணவு.
- நாள் முழுவதும் போதிய தண்ணீர்.
- வெதுவெதுப்பான நீரில் உட்காருதல் (sitz bath).
- மலம் கழிப்பதைத் தள்ளிப்போடாமல் இருத்தல்.
இவற்றுடன், டாக்டர் எழுதித் தரும் மருந்துகளும் களிம்புகளும் வெடிப்பு ஆற உதவும். புதிதாக வந்த வெடிப்புகள், பெரும்பாலும் சில வாரங்களில் ஆறிவிடுகின்றன.
சாப்பிட வேண்டிய உணவுகள்
கீரைகள், காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், முழு தானியங்கள் மலத்தை இளகலாக வைக்கின்றன. காரம் அதிகமான உணவையும், எண்ணெயில் பொரித்த உணவையும் குறைப்பது நல்லது.
அறுவை சிகிச்சை எப்போது தேவை?
6 முதல் 8 வாரங்கள் ஆகியும் ஆறாத வெடிப்பை, நாள்பட்ட வெடிப்பு (chronic fissure) என்பார்கள். மருந்துகளால் அது ஆறாதபோது, அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
ஃபிஷர் அறுவை சிகிச்சை எப்படிச் செய்யப்படும்?
ஆசனவாயைச் சுற்றியுள்ள உள் தசை இறுக்கமாக இருப்பதால், வெடிப்பு ஆறத் தாமதமாகிறது. அந்தத் தசையின் ஒரு சிறு பகுதியில் சிறிய கீறல் செய்யப்பட்டு, அதன் இறுக்கம் குறைக்கப்படுகிறது. இதை lateral sphincterotomy என்பார்கள். இது ஒரு சிறிய அறுவை சிகிச்சை. உங்களுக்கு ஏற்ற முறையை அறுவை சிகிச்சை நிபுணர் விளக்குவார்.
ஃபிஷர் அறுவை சிகிச்சைக்குப் பின்
மலம் இளகலாக இருக்க நார்ச்சத்து உணவு, தண்ணீர், டாக்டர் எழுதித் தரும் மருந்துகள். வெதுவெதுப்பான நீரில் உட்காருவது இதம் தரும். எப்போது வேலைக்குத் திரும்பலாம் என்பதை டாக்டரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.
வெடிப்பு, மூல நோய், பவுத்திரம்: என்ன வேறுபாடு?
மூன்றும் வெவ்வேறு. வெடிப்பு, ஆசனவாயின் உட்புறத் தோலில் ஏற்படும் சிறு கீறல். மூல நோய், ரத்தக்குழாய் வீக்கம். பவுத்திரம், ஆசனவாய் அருகே உருவாகும் சிறு பாதை. பரிசோதித்த பிறகே எது என்று உறுதியாகத் தெரியும்.
எந்த டாக்டரைப் பார்க்க வேண்டும்?
பொது அறுவை சிகிச்சை நிபுணர் (General Surgeon). சுகபிரியாவில், நீண்ட அனுபவம் கொண்ட மூத்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் இருக்கிறார்கள். இது பலருக்கும் வரும் ஒன்று; தயக்கமின்றிப் பேசலாம்.
இந்தப் பக்கம் பொதுவான தகவலுக்காக. உங்கள் உடல்நிலைக்கான ஆலோசனையை டாக்டரிடம் நேரில் பெறுங்கள்.

வாங்க, பார்த்துக்கலாம்.
சுகபிரியா மருத்துவமனைLake View Road (80 அடி ரோடு), KK நகர், மதுரை – 625020
சுந்தரம் பார்க் அருகில்
தூங்கா நகரம் மதுரை. நாங்களும் 24 மணி நேரமும் இருக்கிறோம்.
சுகபிரியா பற்றி, இங்கு வந்த குடும்பங்கள் Google-ல் எழுதியதைப் படியுங்கள்.
Google கருத்துகளைப் படிக்கRead our Google reviewsமூத்த நிபுணர்கள்.
நீண்ட அனுபவம்.Senior surgeons with extensive experience
- நிபுணர்General Surgeon
- புதிய Operation TheatreC-Arm
- ICUVentilator
- Lab, Digital X-rayEcho, TMT
- 24 மணி நேரமும்Open 24 hours
வரும்போது, முந்தைய reports, scan, மருந்துச் சீட்டுகளைக் கொண்டு வாருங்கள்.

Fissure Treatment in Madurai
An anal fissure (fissure in ano) is a small tear in the thin lining of the anus. The usual signs are pain or burning during and after passing stools, and a little bright red blood with the stool.
Most new fissures heal in a few weeks with more fibre, more water, warm sitz baths and the medicines or ointments a doctor prescribes. A fissure that has not healed after six to eight weeks is called a chronic fissure. When medicines do not heal it, fissure surgery is advised: a minor operation (lateral sphincterotomy) in which a small cut is made in the tight muscle around the anus, so that it relaxes and the tear can heal.
At Sugapriya Hospital, KK Nagar, Madurai, fissures are treated by senior surgeons with extensive experience, and fissure operations are done in a new operation theatre. The hospital is open 24 hours.
Does every fissure need surgery?
No. Most fissures heal with diet changes and medicines. Surgery is for a fissure that has not healed after several weeks of treatment.
How is a fissure different from piles and a fistula?
A fissure is a tear in the lining of the anus. Piles are swollen blood vessels. A fistula is a small tunnel that opens near the anus. An examination tells them apart.
Which doctor should I see for a fissure?
A general surgeon. Call 90929-99686 or 0452-4991516 for consultation hours.
This page gives general information. Please see a doctor for advice about your own health.
மற்ற அறுவை சிகிச்சைகள்Other surgeries at Sugapriya Hospital, Madurai
- மூல நோய் சிகிச்சைPiles Treatment
- பவுத்திரம் அறுவை சிகிச்சைFistula Surgery
- குடலிறக்கம் அறுவை சிகிச்சைHernia Surgery
- விரை வீக்கம் அறுவை சிகிச்சைHydrocele Surgery
- சுன்னத், முன்தோல் நீக்கம்Circumcision
- கொழுப்பு கட்டி அகற்றுதல்Lipoma and Cyst Removal
- பித்தப்பை கல் ஆபரேஷன்Gallbladder Stone Surgery
- குடல்வால் அறுவை சிகிச்சைAppendix Operation
- முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைKnee Replacement
- கர்ப்பப்பை நீக்கம்Hysterectomy (Uterus Removal Surgery)
- கர்ப்பப்பை கட்டி (நார்த்திசுக் கட்டி) அகற்றுதல்Fibroid Removal
- சினைப்பை நீர்க்கட்டி அறுவை சிகிச்சைOvarian Cyst Surgery
