Sugapriya Hospital, Madurai

90929-99686 0452-4991516

24 மணி நேரமும்

பொது அறுவை சிகிச்சைGeneral Surgery

கொழுப்பு கட்டி (லிபோமா), சிஸ்ட் நீக்கம்Lipoma and Cyst Removal in Madurai

தோலுக்கு அடியில் வரும் கொழுப்பு கட்டி (lipoma), சிஸ்ட் (cyst) ஆகியவற்றை நீக்கும் சிறிய அறுவை சிகிச்சை.

கொழுப்பு கட்டி (லிபோமா) என்றால் என்ன?

தோலுக்கு அடியில், கொழுப்புத் திசு சேர்ந்து உருவாகும் மென்மையான கட்டி. ஆங்கிலத்தில் lipoma. இது மெதுவாக வளரும், தீங்கற்ற கட்டி.

கொழுப்பு கட்டி எப்படி இருக்கும்?

தொட்டால் மென்மையாக இருக்கும்; விரலால் அழுத்தினால் சற்று நகரும். பெரும்பாலும் வலி இருக்காது. கழுத்து, தோள், முதுகு, கை, தொடை ஆகிய இடங்களில் அதிகம் வரும்.

கட்டி வேகமாக வளர்ந்தாலோ, கடினமாக இருந்தாலோ, வலித்தாலோ, டாக்டரிடம் காட்டுங்கள்.

கொழுப்பு கட்டி எதனால் வருகிறது?

தெளிவான காரணம் இல்லாமலே வரலாம். சில குடும்பங்களில் பலருக்கு வருவதுண்டு. நடுத்தர வயதினருக்குச் சற்று அதிகம்.

சிஸ்ட் (cyst) என்றால் என்ன?

தோலுக்கு அடியில் உருவாகும் சிறு பை. அதன் உள்ளே கெட்டியான, வெண்மையான பொருள் நிறைந்திருக்கும். இதை sebaceous cyst என்பார்கள். தொற்று ஏற்பட்டால் சிவந்து, வீங்கி, வலிக்கலாம்.

கொழுப்பு கட்டி கரைய என்ன செய்ய வேண்டும்?

மாத்திரை, களிம்பு, உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றால் கொழுப்பு கட்டி கரைவதில்லை. தொந்தரவு தராத சிறு கட்டியை அப்படியே விட்டுவிடலாம். நீக்க வேண்டும் என்றால், அறுவை சிகிச்சையே வழி.

எப்போது நீக்க வேண்டும்?

  • கட்டி பெரிதாகும்போது.
  • வலி அல்லது அசௌகரியம் தரும்போது.
  • சிஸ்டில் அடிக்கடி தொற்று வரும்போது.
  • கட்டி எந்த வகை என்று உறுதி செய்ய வேண்டியிருக்கும்போது.

கொழுப்பு கட்டி அறுவை சிகிச்சை எப்படிச் செய்யப்படும்?

கட்டியின் மேல் சிறிய கீறல் செய்யப்பட்டு, கட்டி முழுவதுமாக நீக்கப்படுகிறது. சிஸ்ட் என்றால், அதன் பையும் சேர்த்து நீக்கப்படுகிறது. பிறகு அந்த இடம் தைக்கப்படுகிறது. சிறிய கட்டிகளுக்கு, பெரும்பாலும் அந்த இடத்தை மட்டும் மரத்துப்போகச் செய்தால் போதும் (local anaesthesia).

அறுவை சிகிச்சைக்குப் பின்

கட்டுப் போட்ட இடத்தைச் சுத்தமாக, ஈரம் படாமல் வைத்துக்கொள்ளுங்கள். தையல் எப்போது பிரிக்க வேண்டும் என்பதை டாக்டர் சொல்வார். நீக்கிய கட்டி, தேவைப்பட்டால் பரிசோதனைக்கு அனுப்பப்படும்.

மீண்டும் வருமா?

முழுவதுமாக நீக்கப்பட்ட கட்டி, அதே இடத்தில் மீண்டும் வருவது அரிது. வேறு இடங்களில் புதிய கட்டிகள் வரலாம்.

எந்த டாக்டரைப் பார்க்க வேண்டும்?

பொது அறுவை சிகிச்சை நிபுணர் (General Surgeon). சுகபிரியாவில், நீண்ட அனுபவம் கொண்ட மூத்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் இருக்கிறார்கள். டாக்டரின் நேரம் தெரிந்துகொள்ள, எங்களை அழைக்கலாம்.

இந்தப் பக்கம் பொதுவான தகவலுக்காக. உங்கள் உடல்நிலைக்கான ஆலோசனையை டாக்டரிடம் நேரில் பெறுங்கள்.

“உயர்ந்த நலம், நிரந்தர ஆரோக்கியம்” — The outpatient entrance of Sugapriya Hospital

வாங்க, பார்த்துக்கலாம்.

சுகபிரியா மருத்துவமனைLake View Road (80 அடி ரோடு), KK நகர், மதுரை – 625020
சுந்தரம் பார்க் அருகில்

தூங்கா நகரம் மதுரை. நாங்களும் 24 மணி நேரமும் இருக்கிறோம்.

சுகபிரியா பற்றி, இங்கு வந்த குடும்பங்கள் Google-ல் எழுதியதைப் படியுங்கள்.

Google கருத்துகளைப் படிக்கRead our Google reviews

மூத்த நிபுணர்கள்.
நீண்ட அனுபவம்.Senior surgeons with extensive experience

  • நிபுணர்General Surgeon
  • புதிய Operation TheatreC-Arm
  • ICUVentilator
  • Lab, Digital X-rayEcho, TMT
  • 24 மணி நேரமும்Open 24 hours

வரும்போது, முந்தைய reports, scan, மருந்துச் சீட்டுகளைக் கொண்டு வாருங்கள்.

புதிய Operation Theatre, C-Arm — The new operation theatre with C-arm at Sugapriya Hospital
புதிய Operation Theatre. உங்களுக்கும், உடன் வரும் குடும்பத்துக்கும் அதே அக்கறை.

Lipoma and Cyst Removal in Madurai

A lipoma is a soft lump of fatty tissue under the skin. It grows slowly, moves a little under the finger and is usually painless. Lipomas are harmless (benign) and are common on the neck, shoulders, back, arms and thighs.

A sebaceous cyst is a small sac under the skin filled with thick, whitish material. It can become infected, and then turns red, swollen and painful.

Tablets, creams, diet and exercise do not dissolve a lipoma. A small lump that causes no trouble can be left alone. Lipoma removal or cyst removal is advised when the lump grows, hurts or keeps getting infected, or when the doctor needs to confirm what kind of lump it is. It is a minor operation: the lump is removed whole through a small cut, often under local anaesthesia.

At Sugapriya Hospital, KK Nagar, Madurai, lipoma and cyst removal is done in a new operation theatre by senior surgeons with extensive experience.

Can a lipoma be removed without surgery?

No medicine or cream is known to dissolve a lipoma. Removal means a minor operation.

Does every lipoma need to be removed?

No. A small lipoma that causes no trouble can be left alone. A doctor should examine any lump that grows fast, feels hard or hurts.

Which doctor removes a lipoma or cyst?

A general surgeon. Call 90929-99686 or 0452-4991516 for consultation hours.

This page gives general information. Please see a doctor for advice about your own health.