பொது அறுவை சிகிச்சைGeneral Surgery
பவுத்திரம் (ஃபிஸ்டுலா) அறுவை சிகிச்சைFistula Surgery in Madurai
ஆசனவாய் அருகே உருவாகும் சிறு பாதையை (fistula) சரிசெய்யும் அறுவை சிகிச்சை.
பவுத்திரம் (ஃபிஸ்டுலா) என்றால் என்ன?
ஆசனவாயின் உட்புறத்துக்கும், அதன் அருகே உள்ள வெளித்தோலுக்கும் இடையே உருவாகும் சிறு பாதை. ஆங்கிலத்தில் anal fistula அல்லது fistula in ano. பௌத்திரம் என்றும் எழுதுவார்கள்.
பவுத்திரம் அறிகுறிகள்
ஆசனவாய் அருகே திரும்பத் திரும்ப வரும் சிறு கட்டி. அதிலிருந்து சீழ் அல்லது நீர் கசிதல். உட்காரும்போது வலி, அந்த இடத்தில் அரிப்பு.
காய்ச்சலுடன் வலியும் வீக்கமும் இருந்தால், காத்திருக்காமல் மருத்துவமனைக்கு வாருங்கள். சுகபிரியா 24 மணி நேரமும் திறந்திருக்கிறது.
பவுத்திரம் எப்படி இருக்கும்?
ஆசனவாய்க்கு அருகில், தோலில் ஒரு சிறு துளை அல்லது சிறு கட்டி போலத் தெரியும். அது சில நாட்கள் மூடியிருந்து, மீண்டும் திறந்து கசியலாம்.
பவுத்திரம் எதனால் வருகிறது?
பெரும்பாலும், ஆசனவாய் அருகே ஏற்படும் சீழ் கட்டியே (abscess) தொடக்கம். சீழ் வெளியேறிய பிறகு, அது வந்த பாதை மூடாமல் தங்கிவிடும்போது பவுத்திரம் உருவாகிறது.
மருந்தால் குணமாகுமா?
மருந்துகள் தொற்றைக் கட்டுப்படுத்தும்; உருவான பாதையை மூடுவதில்லை. பவுத்திரத்துக்கு அறுவை சிகிச்சையே வழக்கமான சிகிச்சை.
பவுத்திரம் அறுவை சிகிச்சை எப்படிச் செய்யப்படும்?
பாதை எந்த வழியாகச் செல்கிறது என்பதைப் பரிசோதித்த பிறகு, முறை முடிவு செய்யப்படுகிறது. பெரும்பாலும், அந்தப் பாதை திறக்கப்பட்டு, உள்ளிருந்து ஆறும்படி விடப்படுகிறது (fistulotomy). சிலருக்கு, பாதையில் ஒரு மெல்லிய நூல் (seton) வைக்கப்படுகிறது. உங்களுக்கு ஏற்ற முறையை அறுவை சிகிச்சை நிபுணர் விளக்குவார்.
பவுத்திரம் அறுவை சிகிச்சைக்குப் பின்
புண் உள்ளிருந்து மெதுவாக ஆறும்; இதற்குச் சில வாரங்கள் ஆகலாம். டாக்டர் சொல்லும் நாட்களில் கட்டு மாற்றிக்கொள்ள வேண்டும். வெதுவெதுப்பான நீரில் உட்காருவது (sitz bath) இதம் தரும்.
பவுத்திரம் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்
நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள், பழங்கள், போதிய தண்ணீர். மலம் இளகலாக இருந்தால், புண் ஆறுவது எளிது. உணவால் மட்டும் பவுத்திரம் மூடுவதில்லை.
ஆசனவாய் சீழ் கட்டியும் பவுத்திரமும்
ஆசனவாய் அருகே வலியுடன் வரும் வீக்கம், சீழ் கட்டியாக (abscess) இருக்கலாம். அதற்கு, சீழை வெளியேற்றும் சிறிய அறுவை சிகிச்சை தேவைப்படும். சிலருக்கு, அதன் பிறகு பவுத்திரம் உருவாகலாம்.
பவுத்திரம், மூல நோய், வெடிப்பு: என்ன வேறுபாடு?
மூன்றும் வெவ்வேறு. பவுத்திரம், ஆசனவாய் அருகே உருவாகும் சிறு பாதை. மூல நோய், ரத்தக்குழாய் வீக்கம். ஆசனவாய் வெடிப்பு, ஆசனவாயின் உட்புறத் தோலில் ஏற்படும் சிறு கீறல். பரிசோதித்த பிறகே எது என்று உறுதியாகத் தெரியும்.
எந்த டாக்டரைப் பார்க்க வேண்டும்?
பொது அறுவை சிகிச்சை நிபுணர் (General Surgeon). சுகபிரியாவில், நீண்ட அனுபவம் கொண்ட மூத்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் இருக்கிறார்கள். தயக்கமின்றிப் பேசலாம்.
இந்தப் பக்கம் பொதுவான தகவலுக்காக. உங்கள் உடல்நிலைக்கான ஆலோசனையை டாக்டரிடம் நேரில் பெறுங்கள்.

வாங்க, பார்த்துக்கலாம்.
சுகபிரியா மருத்துவமனைLake View Road (80 அடி ரோடு), KK நகர், மதுரை – 625020
சுந்தரம் பார்க் அருகில்
தூங்கா நகரம் மதுரை. நாங்களும் 24 மணி நேரமும் இருக்கிறோம்.
சுகபிரியா பற்றி, இங்கு வந்த குடும்பங்கள் Google-ல் எழுதியதைப் படியுங்கள்.
Google கருத்துகளைப் படிக்கRead our Google reviewsமூத்த நிபுணர்கள்.
நீண்ட அனுபவம்.Senior surgeons with extensive experience
- நிபுணர்General Surgeon
- புதிய Operation TheatreC-Arm
- ICUVentilator
- Lab, Digital X-rayEcho, TMT
- 24 மணி நேரமும்Open 24 hours
வரும்போது, முந்தைய reports, scan, மருந்துச் சீட்டுகளைக் கொண்டு வாருங்கள்.

Fistula Surgery in Madurai
An anal fistula (fistula in ano) is a small tunnel between the inside of the anus and the skin near it. It usually begins with an abscess, a collection of pus near the anus. When the pus has drained, the path it took can stay open and become a fistula.
Common signs are a small boil near the anus that keeps coming back, discharge of pus or fluid, pain while sitting and itching. Medicines control infection but do not close the tunnel, so fistula treatment means surgery. Most often the tunnel is opened so that it heals from the inside (fistulotomy). For some people a thin thread (seton) is placed in it. The surgeon decides after examining the path of the fistula.
At Sugapriya Hospital, KK Nagar, Madurai, fistula surgery is done in a new operation theatre by senior surgeons with extensive experience. The hospital is open 24 hours.
Can a fistula heal without surgery?
Medicines can settle the infection for a time, but the tunnel remains. Surgery is the standard treatment.
How long does recovery take after fistula surgery?
The wound heals from the inside over some weeks. Dressings, warm sitz baths, fibre and water help. Ask your surgeon when you can return to work.
Which doctor treats a fistula?
A general surgeon. Call 90929-99686 or 0452-4991516 for consultation hours.
This page gives general information. Please see a doctor for advice about your own health.
மற்ற அறுவை சிகிச்சைகள்Other surgeries at Sugapriya Hospital, Madurai
- மூல நோய் சிகிச்சைPiles Treatment
- ஆசனவாய் வெடிப்பு சிகிச்சைFissure Treatment
- குடலிறக்கம் அறுவை சிகிச்சைHernia Surgery
- விரை வீக்கம் அறுவை சிகிச்சைHydrocele Surgery
- சுன்னத், முன்தோல் நீக்கம்Circumcision
- கொழுப்பு கட்டி அகற்றுதல்Lipoma and Cyst Removal
- பித்தப்பை கல் ஆபரேஷன்Gallbladder Stone Surgery
- குடல்வால் அறுவை சிகிச்சைAppendix Operation
- முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைKnee Replacement
- கர்ப்பப்பை நீக்கம்Hysterectomy (Uterus Removal Surgery)
- கர்ப்பப்பை கட்டி (நார்த்திசுக் கட்டி) அகற்றுதல்Fibroid Removal
- சினைப்பை நீர்க்கட்டி அறுவை சிகிச்சைOvarian Cyst Surgery
