Sugapriya Hospital, Madurai

90929-99686 0452-4991516

24 மணி நேரமும்

சிறுநீரகவியல்Urology

முன்தோல் நீக்கம் (சுன்னத்) அறுவை சிகிச்சைCircumcision Surgery in Madurai

ஆண்குறியின் முன்தோலை நீக்கும் சிறிய அறுவை சிகிச்சை. மருத்துவக் காரணங்களுக்காகவும், மத, குடும்ப வழக்கப்படியும் செய்யப்படுகிறது.

முன்தோல் நீக்கம் (சுன்னத்) என்றால் என்ன?

ஆண்குறியின் நுனியை மூடியிருக்கும் தோலை (முன்தோல்) நீக்கும் அறுவை சிகிச்சை. ஆங்கிலத்தில் circumcision. சுன்னத், விருத்தசேதனம் என்றும் சொல்வார்கள்.

எதற்காகச் செய்யப்படுகிறது?

  • முன்தோல் குறுக்கம் (phimosis): முன்தோல் இறுக்கமாக இருந்து, பின்னால் இழுக்க முடியாத நிலை.
  • முன்தோலில் அடிக்கடி வரும் தொற்று. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது சற்று அதிகம்.
  • மத, குடும்ப வழக்கப்படி.

முன்தோல் குறுக்கம் (phimosis) என்றால் என்ன?

முன்தோலின் நுனி இறுக்கமாக இருப்பதால், அதைப் பின்னால் இழுக்க முடியாத நிலை. முன்தோல் இறுக்கம் என்றும் சொல்வார்கள். சிறு குழந்தைகளுக்கு முன்தோல் ஒட்டியிருப்பது இயல்பு; வளர வளர அது தானாகவே தளர்கிறது.

முன்தோல் குறுக்கம் அறிகுறிகள்

முன்தோலைப் பின்னால் இழுக்க முடியாமை, சிறுநீர் கழிக்கும்போது முன்தோல் உப்புதல், அந்த இடத்தில் சிவத்தல், அரிப்பு, அடிக்கடி தொற்று.

பின்னால் இழுத்த முன்தோல் மீண்டும் முன்னால் வராமல் வீங்கினால், காத்திருக்காமல் மருத்துவமனைக்கு வாருங்கள்.

முன்தோல் குறுக்கம் சிகிச்சை

தொடக்க நிலையில், டாக்டர் எழுதித் தரும் களிம்புகள் சிலருக்கு உதவும். அவை போதாதபோது, அல்லது தொற்று அடிக்கடி வரும்போது, முன்தோல் நீக்கம் பரிந்துரைக்கப்படுகிறது.

சுன்னத் ஆபரேஷன் எப்படிச் செய்யப்படும்?

முன்தோல் நீக்கப்பட்டு, அந்த இடம் தைக்கப்படுகிறது. இது ஒரு சிறிய அறுவை சிகிச்சை. அந்த இடத்தை மட்டும் மரத்துப்போகச் செய்வதா, மயக்க மருந்து தருவதா என்பதை (anaesthesia), வயதையும் உடல்நிலையையும் பொறுத்து டாக்டர் முடிவு செய்வார்.

பெரியவர்களுக்கும் செய்யலாமா?

செய்யலாம். முன்தோல் குறுக்கம், அடிக்கடி வரும் தொற்று போன்ற காரணங்களுக்காக, எந்த வயதிலும் செய்யப்படுகிறது.

முன்தோல் நீக்கத்தின் நன்மைகள்

அந்தப் பகுதியைச் சுத்தமாக வைத்துக்கொள்வது எளிதாகிறது. ஆண்குறியின் நுனியில் தொற்று வரும் வாய்ப்பு குறைகிறது.

அறுவை சிகிச்சைக்குப் பின்

சில நாட்கள் ஓய்வு. தளர்வான உடைகள் வசதியாக இருக்கும். அந்த இடத்தைச் சுத்தமாக, ஈரம் படாமல் வைத்துக்கொள்ளுங்கள். சில நாட்கள் லேசான வீக்கம் இருப்பது இயல்பு. புண் முழுவதும் ஆறச் சில வாரங்கள் ஆகும்; அதுவரை டாக்டர் சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

எந்த டாக்டரைப் பார்க்க வேண்டும்?

பொது அறுவை சிகிச்சை நிபுணர் (General Surgeon) அல்லது சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் (Urologist). சுகபிரியாவில், நீண்ட அனுபவம் கொண்ட மூத்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் இருக்கிறார்கள். தயக்கமின்றிப் பேசலாம்.

இந்தப் பக்கம் பொதுவான தகவலுக்காக. உங்கள் உடல்நிலைக்கான ஆலோசனையை டாக்டரிடம் நேரில் பெறுங்கள்.

“உயர்ந்த நலம், நிரந்தர ஆரோக்கியம்” — The outpatient entrance of Sugapriya Hospital

வாங்க, பார்த்துக்கலாம்.

சுகபிரியா மருத்துவமனைLake View Road (80 அடி ரோடு), KK நகர், மதுரை – 625020
சுந்தரம் பார்க் அருகில்

தூங்கா நகரம் மதுரை. நாங்களும் 24 மணி நேரமும் இருக்கிறோம்.

சுகபிரியா பற்றி, இங்கு வந்த குடும்பங்கள் Google-ல் எழுதியதைப் படியுங்கள்.

Google கருத்துகளைப் படிக்கRead our Google reviews

மூத்த நிபுணர்கள்.
நீண்ட அனுபவம்.Senior surgeons with extensive experience

  • நிபுணர்கள்General Surgeon, Urologist
  • புதிய Operation TheatreC-Arm
  • ICUVentilator
  • Lab, Digital X-rayEcho, TMT
  • 24 மணி நேரமும்Open 24 hours

வரும்போது, முந்தைய reports, scan, மருந்துச் சீட்டுகளைக் கொண்டு வாருங்கள்.

புதிய Operation Theatre, C-Arm — The new operation theatre with C-arm at Sugapriya Hospital
புதிய Operation Theatre. உங்களுக்கும், உடன் வரும் குடும்பத்துக்கும் அதே அக்கறை.

Circumcision Surgery in Madurai

Circumcision is a minor operation that removes the foreskin, the skin covering the tip of the penis. It is done for medical reasons such as phimosis (a tight foreskin that cannot be drawn back) and repeated infection of the foreskin, and also by religious or family custom.

For early phimosis, ointments prescribed by a doctor help some people. Circumcision is advised when they are not enough or when infections keep returning. It is done at any age, including in adults. The foreskin is removed and the edge is stitched.

At Sugapriya Hospital, KK Nagar, Madurai, circumcision surgery is done in a new operation theatre by senior surgeons with extensive experience. The hospital is open 24 hours.

Is circumcision done for adults?

Yes. Adults have it for phimosis, for repeated infection, or by religious or family custom.

How long is the recovery after circumcision?

A few days of rest, loose clothing and keeping the area clean and dry. Mild swelling for some days is normal. Full healing takes a few weeks; follow your surgeon’s instructions until then.

Which doctor does circumcision surgery?

A general surgeon or a urologist. Call 90929-99686 or 0452-4991516 for consultation hours.

This page gives general information. Please see a doctor for advice about your own health.