Sugapriya Hospital, Madurai

90929-99686 0452-4991516

24 மணி நேரமும்

மகளிர் அறுவை சிகிச்சைWomen’s Surgery (Gynaecology)

கர்ப்பப்பை கட்டி (நார்த்திசுக் கட்டி) அகற்றுதல்Fibroid Removal Surgery in Madurai

தொந்தரவு தரும் கர்ப்பப்பை கட்டிகளுக்கு, மருந்து முதல் அறுவை சிகிச்சை வரை. கட்டியை மட்டும் அகற்றவும் வழி உண்டு.

கர்ப்பப்பை கட்டி (நார்த்திசுக் கட்டி) என்றால் என்ன?

கர்ப்பப்பையின் தசையில் வளரும் கட்டிகள். ஆங்கிலத்தில் fibroids. இவை புற்றுநோய் அல்லாத, தீங்கற்ற கட்டிகள் (benign). ஒன்றாகவோ, பலவாகவோ வரலாம்.

கர்ப்பப்பை கட்டி அறிகுறிகள்

பலருக்கு எந்த அறிகுறியும் இருக்காது. சிலருக்கு:

  • அதிகமான அல்லது நீண்ட நாள் மாதவிடாய் ரத்தப்போக்கு.
  • அடிவயிற்றில் வலி அல்லது கனம்.
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல், மலச்சிக்கல்.
  • ரத்தசோகையால் களைப்பு.

அதிக ரத்தப்போக்குடன் தலைசுற்றல் அல்லது மயக்கம் வந்தால், காத்திருக்காமல் மருத்துவமனைக்கு வாருங்கள். சுகபிரியா 24 மணி நேரமும் திறந்திருக்கிறது.

கர்ப்பப்பை கட்டி வர காரணம்

தெளிவான காரணம் தெரியவில்லை. ஹார்மோன்கள் (estrogen), பரம்பரை ஆகியவை பங்கு வகிக்கின்றன. 30 முதல் 50 வயதுப் பெண்களுக்கு அதிகம்.

மருந்தால் கட்டி கரையுமா?

பொதுவாக, மருந்தால் கட்டி முழுமையாகக் கரைவதில்லை. சில மருந்துகள் ரத்தப்போக்கைக் குறைக்கின்றன; சில, கட்டியின் அளவைத் தற்காலிகமாகக் குறைக்கின்றன. தொந்தரவு தராத சிறு கட்டிகளுக்கு, அவ்வப்போது scan செய்து கவனித்தால் போதும். மாதவிடாய் நின்ற பிறகு பல கட்டிகள் சுருங்குகின்றன.

அறுவை சிகிச்சை எப்போது தேவை?

ரத்தப்போக்கு, வலி, அழுத்தம் ஆகியவை மருந்துகளால் கட்டுப்படாதபோது, அல்லது கட்டி பெரிதாக வளரும்போது பரிந்துரைக்கப்படுகிறது.

கர்ப்பப்பை கட்டி அகற்றுதல் எப்படிச் செய்யப்படும்?

இரண்டு வழிகள் உண்டு:

  • கர்ப்பப்பையை அப்படியே வைத்துக்கொண்டு, கட்டியை மட்டும் அகற்றுதல் (myomectomy). இதன் பிறகு, சிலருக்குப் புதிய கட்டிகள் வரலாம்.
  • கட்டிகள் பலவாகவோ பெரிதாகவோ இருந்தால், அல்லது மீண்டும் வருவதைத் தவிர்க்க விரும்பினால், கர்ப்பப்பை நீக்கம் (hysterectomy).

கட்டியின் அளவு, எண்ணிக்கை, இடம், உங்கள் வயது ஆகியவற்றைப் பொறுத்து, ஏற்ற முறையை டாக்டர் விளக்குவார்.

அறுவை சிகிச்சைக்குப் பின்

விரைவிலேயே, மெதுவாக நடக்கத் தொடங்கலாம். சில வாரங்களுக்குக் கனமான பொருட்களைத் தூக்க வேண்டாம். பின்தொடர் பரிசோதனைக்கு (follow-up) டாக்டர் சொல்லும் நாளில் வாருங்கள்.

எந்த டாக்டரைப் பார்க்க வேண்டும்?

மகளிர் நல மருத்துவர் (Gynaecologist). சுகபிரியாவில், நீண்ட அனுபவம் கொண்ட மூத்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் இருக்கிறார்கள். தனியுரிமை (privacy) காக்கும், பெண்களுக்கு ஏற்ற கவனிப்பு. டாக்டர் பார்க்கும் நேரத்தைத் தெரிந்துகொள்ள, எங்களை அழைக்கலாம். வரும்போது scan அறிக்கைகளைக் கொண்டு வாருங்கள்.

இந்தப் பக்கம் பொதுவான தகவலுக்காக. உங்கள் உடல்நிலைக்கான ஆலோசனையை டாக்டரிடம் நேரில் பெறுங்கள்.

“உயர்ந்த நலம், நிரந்தர ஆரோக்கியம்” — The outpatient entrance of Sugapriya Hospital

வாங்க, பார்த்துக்கலாம்.

சுகபிரியா மருத்துவமனைLake View Road (80 அடி ரோடு), KK நகர், மதுரை – 625020
சுந்தரம் பார்க் அருகில்

தூங்கா நகரம் மதுரை. நாங்களும் 24 மணி நேரமும் இருக்கிறோம்.

சுகபிரியா பற்றி, இங்கு வந்த குடும்பங்கள் Google-ல் எழுதியதைப் படியுங்கள்.

Google கருத்துகளைப் படிக்கRead our Google reviews

மூத்த நிபுணர்கள்.
நீண்ட அனுபவம்.Senior surgeons with extensive experience

  • நிபுணர்Gynaecologist
  • புதிய Operation TheatreC-Arm
  • ICUVentilator
  • Lab, Digital X-rayEcho, TMT
  • 24 மணி நேரமும்Open 24 hours

வரும்போது, முந்தைய reports, scan, மருந்துச் சீட்டுகளைக் கொண்டு வாருங்கள்.

புதிய Operation Theatre, C-Arm — The new operation theatre with C-arm at Sugapriya Hospital
புதிய Operation Theatre. உங்களுக்கும், உடன் வரும் குடும்பத்துக்கும் அதே அக்கறை.

Fibroid Removal Surgery in Madurai

Fibroids are growths in the muscle of the uterus. Fibroids are benign (not cancer). Many women have no symptoms; others have heavy or long periods, pain or heaviness in the lower abdomen, frequent urination, constipation, or tiredness from anaemia.

Small fibroids that cause no trouble can be watched with scans. Medicines can reduce bleeding and, for a time, the size of fibroids. When symptoms are not controlled, fibroid removal surgery is advised: either removing only the fibroids and keeping the uterus (myomectomy), or removing the uterus (hysterectomy) when there are many or large fibroids, or to prevent them coming back.

At Sugapriya Hospital, KK Nagar, Madurai, fibroid surgery is done in a new operation theatre by senior surgeons with extensive experience, with private, women-friendly care and attentive nursing.

Can fibroids be treated without surgery?

Often, yes. Fibroids that cause no symptoms only need to be watched, and medicines can control bleeding. Surgery is for fibroids that cause trouble that medicines do not control.

Which doctor treats fibroids?

A gynaecologist. Bring your scan reports. Call 90929-99686 or 0452-4991516 for consultation hours.

This page gives general information. Please see a doctor for advice about your own health.